உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் சீட்டுக் காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

யாழில் சீட்டுக் காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆலடி பகுதியைச் சேர்ந்த ஆணொருவரும் அவரிடம் சீட்டு கட்டி வருகிறார்.

அந்தவகையில் ஆலடி பகுதியை சேர்ந்த குறித்த நபருக்கு சீட்டு விழுந்துள்ளது. இருப்பினும் அந்த காசு கொடுக்காத காரணத்தால் சீட்டு பிடிக்கும் பெண்ணின் கணவரை கடத்திச் சென்ற குழுவானது அவர் மீது கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பி வந்தது.

இதன்போது வீதி கடமையில் இருந்த சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிந்த நிலையில் குறித்த தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0