இன்று ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய காற்று காரணமாக பரந்தன் பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மின்சாரம் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்றைய தினம்30.04.2026 ஏற்பட்டுள்ள திடீர் மழையுடன் கூடிய காற்று காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டிட தொகுதி மின்சாரம் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன
இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது அன்றாட வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான வியாபார பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகி உள்ளது என வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்