உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புளியங்குளத்தில் புகையிரதம் இயந்திரக் கோளாறு; வடக்கு மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்று, வவுனியா – புளியங்குளம் பகுதியில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புகையிரதம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, வடக்கு மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்போது தாமதமடைந்துள்ளன.

இயந்திரக் கோளாறைச் சரிசெய்து, புகையிரத போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான தீவிர நடவடிக்கைகள் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புகையிரத பயணத்தடை காரணமாக, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பயணிகள் மற்றும் வடக்கு மார்க்கத்தைப் பயன்படுத்தும் ஏனைய பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இயந்திரக் கோளாறு சீர்செய்யப்பட்டவுடன் புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0