உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விமர்சனங்களை மறைப்பதற்கு முயற்சிக்கும் அர்ச்சுனா MP – அதன் வெளிப்பாடே எம்மீதான பொய்ப் பரப்புரை – ஈ.பி.டி.பி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை புனிதராக்குவதற்குமே அர்ச்சுனா MP முயற்சிக்கின்றார்.  அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டும் இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் காணி முரண்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கும் ஈ.பி.டி.பி. க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஈ.பி.டி பி. தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக மையத்தில் இன்று 30 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஈ. பி டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் மேலும் தெரிவிக்கையில் – 

” தமக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கும், தங்களை புனிதர்களாக்குவதற்கும், தியாகிகளாக்குவதற்கும் யாரெல்லாம் விரும்புகின்றார்களோ, அவ்வாறானவர்கள் கையில் எடுக்கின்ற இலகு வழிமுறைதான், ஈ.பி.டி.பி. க்கு எதிரான விமர்சனங்கள். இதுவே நீண்ட வரலாறாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களும், 2023 ஆம் ஆண்டு எமது செயலாளர் நாயகத்துடனான உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார்.

உண்மையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம், பிரதேச அமைப்பாளர் ஊடாக விசாரித்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கு பழைய உரையாடலை வெளிப்படுத்தி தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

எவ்வாறாயினும், இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கள், ஈ.பி.டி.பி. அதிகாரத்தில் இருந்த காலங்களில்கூட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை., ஆயுதங்களை அப்பாவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தியது இல்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0