உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கையில் அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்கும் நோக்கில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று (30) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் பயிற்சி மண்டபத்தில், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதி விவசாயப் பணிப்பாளர், உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

டித்வா புயலினால் விவசாய உபகரணங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்த நிலையில், மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீள உருவாக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கான நிதி ஆதரவு UNOPS நிறுவனத்தின், விருத்தித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

விதைகள் வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக, விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மன்னார் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஜெஸ்மன் மார்க் அவர்கள் வழங்கிய இந்த பயிற்சியில், தரமான விதைத் தெரிவு மற்றும் விதை மேலாண்மை, பயிர் பராமரிப்பு முறைகள் (களை அகற்றுதல், உரப் பயன்பாடு), நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு நுட்பங்கள்,
அதிக விளைச்சலைப் பெறுவதற்கான அறுவடை முறைகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் நிறைவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

0 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0