உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

“நாம் நீலகாமம்”போராட்டத்துக்கு தமிழரசு ஆதரவு

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம்  என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.  

நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்குக் காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் கூலிப்படையின் மிக மோசமான தாக்குதலால் காயமடைந்தும், தமது சொத்துகளை இழந்த நிலையிலும் உள்ள எமது மலையக உறவுகளுக்கு நிச்சயம் நாம் துணை நிற்போம்.

அந்தவகையில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் சாத்வீக வழிப் போராட்டத்துக்கு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து போராட்டம் வெற்றியளிக்க உதவுவோம்.

மலையக உறவுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் நம்பிக்கையோடு எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களோடு கரங்களை இறுகப் பற்றிக்கொள்வோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0