உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான சுகாதார பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் ஆசிரியர்களுக்கான தொற்றாநோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை இன்று நடைபெற்றது.

இதில், இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், உடற் திணிவு சுட்டெண் (BMI) ஆகிய முக்கியமான சுகாதாரக் குறியீடுகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும், இப்பரிசோதனையின் மூலம் தொற்றா நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் எமது அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இணைந்து செயற்பட்டு, நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.

இத்தகைய சுகாதார நடவடிக்கைகள் சமூகத்தில் நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது உடல்நல நிலையை பரிசோதித்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0