உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொத்துவில் லக்சுமி முன்பள்ளியில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

உலக வாய்ச் சுகாதார தினத்தையொட்டி, முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய வாய்ச் சுகாதார பிரிவு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பொத்துவில் றஹ்மத்நகர் முன்பள்ளி மற்றும் குண்டுமடு லக்சுமி முன்பள்ளி ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாய்ச் சுகாதாரம் தொடர்பான ஆரோக்கியமான பற்கள் அழகான புன்னகை எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (28) லக்சுமி முன்பள்ளியில் இடம்பெற்றது.

வாயின் மகிழ்ச்சி… வாழ்வின் மகிழ்ச்சி… ஆரோக்கியமான பற்கள் அழகான புன்னகை எனும் தொனிப்பொருளில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய வாய்ச் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.ஹபீப் முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் பிராந்திய தாய்சேய் நலன் பிரிவு பொறுப்பு அதிகாரி வைத்தியர் பீ.ஜி.டேனியல், நடமாடும் பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.எம்.பைறூஸ் மற்றும் பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ்.ரத்நாயக்க ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, சிறுவர்களின் பற்களைப் பாதுகாக்கவும் பற்சிதைவை தடுப்பதற்காகவும் ‘புளோரைட் வார்னிஷ்’ சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும், சரியான பல் துலக்கும் முறைகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், மற்றும் வாய்வழி நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமூக ஆயுர்வேத வைத்திய அதிகாரி பஸ்மியா, மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.ஜனலோஜினி மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், பாடசாலை பல் சிகிச்சையாளர் வை.அர்ச்சனா உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0