உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (29) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன், எம்.ஜெகதீஸ்வரன், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் நகரசபை, பிரதேச சபை, ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற்று விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான அங்கீகாரம் இதன்போது வழங்கப்பட்டது. மன்னார் பகுதியில் உள்ள குறை குளம் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை கண்டறியுமாறு இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மன்னார் தீவுப் பகுதியில் அண்மைக்காலமாக கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.

அதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், மன்னார் மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையான கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இவற்றுடன் மாவட்டத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0