உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர் கைது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான ஆரம்பப் பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் இலக்கத் தகடுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபர் தற்போது பத்தரமுல்லையிலுள்ள சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் ஆணையாளராகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள அவர், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0