புரவுன் சீக் தோட்ட பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சுற்றுவட்ட கட்டிடம் சரிவு.!
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை வேளையில் பெய்து வரும் கனமழையால் ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பகுதியில் உள்ள புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள சுற்று வட்ட கட்டிடம் சரிந்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இவ்வாலயத்தில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு இதன் காரணமாக தடை ஏற்படும் என அவ் ஆலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்று வட்ட கட்டிடம் அமைக்க நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாச்சார அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

