உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி மேம்பாடு மற்றும் வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு முக்கிய முன்மொழிவு ஆராயப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அர்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களின் வீதி புனரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. ஒலுவில் பிரதேசத்தில் வைத்தியசாலை வீதி, லைட் ஹவுஸ் வீதியின் பல குறுக்குத் தெருக்கள், அன்சாரி ஜும்ஆ பள்ளி வீதி, மத்திய வீதி, பழைய தபால் வீதி மற்றும் வைத்தியசாலை கொங்கிறீட் வீதிகளை காபட் வீதிகளாக மாற்றி புனரமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் லைட் ஹவுஸிலிருந்து துறைமுகம் வரை காபட் வீதி அமைப்பதுடன், அப்பாதைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் புதிய வடிகான்கள் அமைத்து வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பு வழங்குதல் மற்றும் வைத்தியசாலை வீதியையும் துறைமுக வீட்டுத்திட்டத்தையும் இணைக்கும் குறுக்கு வீதிகளை புதிதாக அமைப்பதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

பாலமுனை கிராமப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பாதை மற்றும் வடிகால் பிரச்சினைகளும் கூட்டத்தில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறாமல் கைவிடப்பட்ட பாதை அமைப்பு நடவடிக்கைகளால் பாலமுனை 04 மற்றும் 05 கிராம சேவகர் பிரிவுகளின் பல பாதைகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைக்குமாறு கோரப்பட்டது.

பாலமுனை 05 கடற்கரை வீதியில் நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் நிலை, கல்வெட்டுகளுக்கான தரமற்ற மூடிகள் காரணமாக உருவாகும் விபத்து அபாயம் மற்றும் பிரதான வடிகால்களின் குறுகிய கொள்ளளவு போன்ற பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஹுசைனியா நகர் வீதி மற்றும் பாலமுனை 01, 02 பகுதிகளில் காணப்படும் வெள்ள நீர் தேக்கம் மற்றும் வடிகால் வசதியின்மை தொடர்பாக புதிய வடிகான்கள் மற்றும் வீதிகளை அமைக்க வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் பல முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அல்-ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி, தாருல் ஹஸனாத் வித்தியாலயம், இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் மற்றும் அந்நூர் மஹா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு புதிய பலமாடிக் கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் தேவையான வகுப்பறைகள், கேட்போர் கூடங்கள் அமைத்தல் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

தாருல் இல்ம் வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்திற்கான பார்வையாளர் கதிரைகள் வழங்குதல் மற்றும் இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள ஆராதனை மண்டபத்தை அவசரமாக புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனுடன், ஒலுவில் சீனம்பிட்டி வடிச்சல் வாய்க்காலை முறையாக எல்லைப்படுத்தி, நீர் வடிந்தோடும் திட்டமிட்ட வடிகால் அமைப்பை உருவாக்குவதன் மூலம் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பு வழங்குதல், லைட் ஹவுஸ் மின் விளக்கை மீண்டும் செயல்படுத்தி மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் வடிகான்கள் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் பாலமுனைக் கிராமத்திற்கு கலாச்சார மண்டபம் ஒன்றை நிர்மாணித்தல் ஆகிய முன்மொழிவுகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் தேவைகளை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இம்முன்மொழிவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டதுடன், பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம்.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், உதவி தவிசாளர் பாரூக் நஜீத், பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், எம்.எல்.ரினாஸ், சமன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி. எப்.நஹீஜா முஸாபிர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், கணக்காளர் எம்.எப்.பர்ஹான் மற்றும் திணைக்களத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0