உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறைக்கைதி உயிரிழப்பு; சிறை அதிகாரிகள் ஐவர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கொழும்பு, பொரளை மகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 5 சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறைச்சாலை வளாகத்துக்குள் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பில் பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம், நேற்று மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதி ஒருவரின் மரணத்துக்குச் சிறைச்சாலை அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொரளை பொலிஸார், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0