உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் பிணக்கு நிலவி வரும் நிலையில், கடந்த 25 ஆம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்று புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அர்ச்சுனா சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0