உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை மீனவர் மீதான கொடூர தாக்குதல்; நாமல் கடும் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ் நாட்டில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளமை மிகுந்த கவலைக்குரிய சம்பவம். இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவரின் உடனடிப் பாதுகாப்பை உறுதி செய்து, அவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் இலங்கைக்கு மீள அழைத்து வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்தச் சம்பவம் வடக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதை வெளிப்படுத்துகின்றது.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், அங்குள்ள பொலிஸாரின் முன்னிலையில் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது.” – என்றும் நாமல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0