உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி காணி உரிமையாளர்கள் கடிதத் தலைப்புக்காக பிடிவாதம் பிடிக்கின்றமை கவலையளிக்கின்றது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“காணி அளவீடு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நாம் முனைப்புடன் செயற்பட்ட போதும், கடிதத் தலைப்பு என்ற ஒரு சிறிய விடயத்துக்காகக் காணி உரிமையாளர்கள் அளவீட்டுப் பணிக்குச் சம்மதிக்காமை மிகுந்த கவலையளிக்கின்றது” என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

தையிட்டியில் நேற்று காணி அளவீட்டுப் பணிகள் இரண்டாவது முறையாகவும் தடைப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பிலிருந்து வருகை தந்த புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என அனைவரும் தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக காலை 8 மணி முதல் காத்திருந்தோம்.

காணிகளை விடுவிக்கும் நோக்குடனேயே அளவீடு செய்கின்றோம் என எழுத்துமூல கடிதம் வேண்டுமென உரிமையாளர்கள் கேட்டனர். அதற்கமைய, “பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் கையளிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யப்படுகின்றது” எனும் தலைப்பில், அரச அதிகாரிகள் மற்றும் வலிகாமம் வடக்கு தவிசாளர் உட்பட 7 பேரின் கையொப்பம் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ முத்திரை அடங்கிய கடிதத்தை நாம் வழங்கினோம்.

எனினும், குறித்த கடிதத்தை ஒரு குறிப்பிட்ட அரச நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் தருமாறு அவர்கள் கோரினர். ஒரு நிறுவனத்தின் கடிதத் தலைப்புக்குள் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற நடைமுறைச் சிக்கலை நாம் விளக்கியும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

உரிமையாளர்கள் பொருத்தமான காரணத்தைக் கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், வேறொரு நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டுத் தருமாறு கோருவது நியாயமற்றது.

இந்த விடயங்கள் அனைத்தும் அறிக்கையாகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை விவகாரங்களைக் கையாளும் விசேட குழு இது குறித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0