உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் கலந்து கொண்டு, பிரதேச மக்களின் சுகாதார தேவைகள் மற்றும் நிலையங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.

குறிப்பாக நிந்தவூர்-22 மற்றும் நிந்தவூர்-11 பிரிவுகளில் அமைந்துள்ள தாய் சேய் சுகாதார நிலையங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அங்கு வழமையாக இடம்பெற்று வந்த கிளினிக் சேவைகள் தற்காலிகமாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அட்டப்பள்ளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் குறித்த சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையை கருத்திற் கொண்டு, உடனடியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குறித்த நிலையங்களின் நிலுவைப் பட்டியல்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த கட்டிடங்களை தொடர்ச்சியாக பராமரித்து சேவைகளை இடையூறு இன்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவதானிக்கப்பட்டன.

மேலும், குறித்த சுகாதார நிலையங்களின் பெளதீக சூழலில் காணப்படும் திருத்தப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அவை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை தனது முழுமையான கவனத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் கண்காணிப்பு சிறப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சுல்பிகார், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

பொதுமக்களின் சுகாதார சேவைகள் இடையூறு இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

59 0 0