உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வரலாற்று சாதனை: வடமராட்சி வலய கிரிக்கெட் தொடரில் உடுத்துறை மகாவித்தியாலயம் சாம்பியன்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

வடமராட்சி வலய பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக நடைபெற்ற துடுப்பாட்டத்தொடரில், உடுத்துறை மகாவித்தியாலய ஆண்கள் அணி முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த 27.04.2026 அன்று கரணவாய் கொலின்ஸ் வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரில், உடுத்துறை மகாவித்தியாலய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் சுற்று ஆட்டத்தில் விக்னேஸ்வரா மகாவித்தியாலய அணியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றனர் பின்னர் இரண்டாம் சுற்று கம்பர்மலை மகாவித்தியாலய அணியுடனான போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றியைத் தொடர்ந்தனர்.

அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி (Hartley College) அணியுடன் மோதி, விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றியைத் தமதாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இறுதிப் போட்டி மற்றும் மாகாண மட்டத் தெரிவு இடம் பெற்றது இதில் மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியை எதிர்கொண்ட உடுத்துறை மகாவித்தியாலயம், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடியது.

“பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக வலய மட்டத்தில் கிரிக்கெட் சம்பியனாக முடிசூடி, மாகாண மட்டப் போட்டிகளுக்கு உடுத்துறை மகாவித்தியாலயம் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.”

இந்த வரலாற்று வெற்றியை ஈட்டிய வீரர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என அனைவருக்கும் ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

42 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0