உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 28 ஆம் திகதி மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற 9 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

முதலில் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பொலிஸ் உள்ளக மைதானம் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் உரை மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்களின் உரைகள் இடம்பெற்றன.

பின்னர் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுச் சென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.இக்கௌரவிக்கும் நிகழ்வில் நினைவுப்பரிசில்களுடன் புகைப்படம் பொறிக்கப்பட்ட கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வுகள் யாவும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

42 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0