உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நினைவு கூரப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவராகக் கருதப்படும் ஐ.பி.சி தமிழின் ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் ஐ.பி.சி கலையகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு, தராக்கி சிவராமின் ஊடகப் பங்களிப்புகள் மற்றும் தமிழ்தேசிய சிந்தனையில் அவர் வகித்த இடம் குறித்து நினைவுகூர்ந்தனர்.

தமிழர் அரசியல், சமூக மற்றும் மனித உரிமை விடயங்களை துல்லியமாகவும் துணிச்சலுடனும் வெளிப்படுத்திய ஊடகவியலாளராக தராக்கி சிவராம் போற்றப்படுகிறார்.


அவரது எழுத்துகளும் பகுப்பாய்வுகளும் இன்றளவும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளன என உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.நினைவு நிகழ்வின் ஒரு பகுதியாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது வாழ்க்கை மற்றும் பணியைப் பிரதிபலிக்கும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் இன்றுவரை ஈடுசெய்யப்படமுடியாத ஒரவராகவும் அதேநேரம் தமிழர் தேசத்தின் முன்வைத்து எண்ணப்படக்கூடிய ஒருவருமாகிய IBC தமிழின் ஊடகவியலாளர் தராக்கி ஊடக வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளதாகவும், அவரின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0