உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மதுபானசாலைகளில் பகல் நேரத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்கத் தடை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகர சபையில் இன்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்ய முடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் 5 மாதங்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட கள் மதுபானசாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தி தருமாறு உள்ளூர் கள் உற்பத்தியாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் குறித்த கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இருப்பினும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மதத்துடன் விற்பனை நேரக்கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் (Wine Stores) தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை (Toddy Bottling Plant) மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினை தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கு சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைமுறைகளை மதுபானசாலை உரிமையாளர்கள் முறையாக பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதுடன், உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனைசார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0