உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புரட்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்.

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரும், 1980களில் ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மூலம் ஈழத்தமிழர்களிடம் விடுதலைக் கனலை மூட்டிய புரட்சிப் பாடகர், தேனிசை செல்லப்பா இன்று (28.04.2026) காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற தமிழ் பாடகராக அறியப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார்.

ஈழ விடுதலை எழுச்சி, தமிழர் தாகம், வீரத்தின் வேர்கள் போன்ற பல இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இவர் இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களை பாடி வந்தார்.

ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் வெளிப்படுத்திய இவர் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த சி.பா.ஆதித்தனார் விரும்பினார். அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் சென்றதால் செல்லப்பா மேடையேற்றப்பட்டார்.

அவரது பாடல், பிடித்துப்போன சி. பா. ஆதித்தனார் செல்லப்பாவை தமது அரசியல் பிரசாரத்தில் நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.

அந்த நேரத்தில் இலங்கையில் 1964 ஒக்டோபர் 30 இல் மலையக மக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து இலட்சம் மலையகத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார். அந்தப்பாடல் “செந்தமிழா மனம் பொங்குதடா..

இந்தப்பாடல் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் பேபி சுப்பிரமணியத்தை கவர்ந்தது.

அது 1980களின் தொடக்கம் ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் மூலமாக ஈழத்து புரட்சிப்பாடல்களை பாடச் செய்தார்.

1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார், யாழ்கோட்டை மைதானத்தில் நடந்த முத்தமிழ் விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது, இலட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் சந்தித்தார்.

இவர் கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இன்னும்பல கவிஞர்களால் எழுதிய பல பாடல்களை பாடியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0