உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது. ஆனால், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகவே உள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரட்டை கொடுப்பனவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் “அடிப்படையற்றவை” என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக ஒப்பந்தகாரர்களுக்கு 263 மில்லியன் ரூபாய் தவறுதலாக அனுப்பப்பட்டதை, இலங்கை வங்கியின் நிதித் திரும்பப் பெறும் அறிவித்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை மீளப் பெறப்படவோ அல்லது கணக்கில் காட்டப்படவோ இல்லை.

உத்தியோகபூர்வ ஆவணங்களே உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, எந்த அடிப்படையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை மறுக்கின்றார்.?” என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விவகாரத்தில் அமைதி காப்பதையும், அரசின் மறுப்பு அறிக்கைகளையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த காலங்களில் சர்ச்சை ஏற்படுத்திய “திறைசேரி மின்னஞ்சல் மோசடி” போன்ற விவகாரங்களுடன் இதனைத் தொடர்புபடுத்திய நாமல் ராஜபக்ஷ, அரசு உண்மைகளை மறைக்க முற்படாமல், நடந்த தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் வரிப்பணம் முறையாகக் கையாளப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0