உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தல்; பிரதான சூத்திரதாரியான பிக்கு தடுப்புக்காவலில்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 பிக்குகள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பாரிய கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் பிக்கு கைது செய்யப்பட்டு, எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஏனைய பிக்குகள் பிடிபட்டதைத் தொடர்ந்து, மேற்படி பிரதான சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்று மீரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட சமயம் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபானி அபேசேகர முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை மே மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை இவரே மேற்கொண்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அனைத்துத் தொடர்புகளையும் ‘வட்ஸ்அப்’ ஊடாகவே இவர் கையாண்டுள்ளார்.

பயணப் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ ரக போதைப்பொருள்கள் இவரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும், இந்த வலையமைப்பு எவ்வாறு இயங்கியது என்பது குறித்தும் மேற்படி பிரதான சந்தேகநபரான பிக்குவைப் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0