உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வாவியில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

குருநாகல் மாவட்டத்தில் மஹவ பகுதியில் உள்ள வாவியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவேரிய வாவியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நீராடிக்கொண்டிருந்த போது அந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயதுடைய மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

உறவினர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இளைஞருக்கு மரணம் நேர்ந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

23 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0