உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபாய் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை விடவும் அதிகளவான தொகையை விநியோகஸ்தருக்கு வழங்காமல் அரசு தடுத்து வைத்துள்ளதால், பொதுமக்களுக்கோ அல்லது அரசுக்கோ எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது” என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, குறித்த விநியோகஸ்தருக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 9.15 பில்லியன் ரூபாய் கொடுப்பனவை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தொகையானது மதிப்பிடப்பட்ட நட்டமான 8 பில்லியன் ரூபாவை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவாக இருந்ததால் சக்தி உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இந்த நட்டத்தை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க மாட்டோம் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.

தரம் குறைந்த மூன்று நிலக்கரி கப்பல்களுக்கான 5 பில்லியன் ரூபாய் கொடுப்பனவு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நிறுவனத்திடம் இருந்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4.5 பில்லியன் ரூபா) பெறுமதியான செயலாற்றுகைப் பிணைப்பணமும் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி தரம் குறைந்த நிலக்கரியைத் திருப்பி அனுப்ப முடியாது என்பதால், நிதி ரீதியான தண்டனைகள் மூலமே நட்டத்தை ஈடு செய்ய முடியும். எனவே, இந்த விவகாரத்தில் ஏற்படும் முழுமையான நட்டத்தையும் விநியோகஸ்தரே ஏற்க வேண்டும். இதில் அரசுக்கோ அல்லது வரி செலுத்தும் மக்களுக்கோ எவ்வித சுமையும் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

23 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0