உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தெல்லிப்பழை பொலிஸார் முதுகெலும்பு இருந்தால் சவாலுக்கு வாருங்கள் – மகனுக்காக பொங்கிய தாய்..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப் படுத்தியதாகவும், தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறும் தாயொருவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் இளைஞனின் தாய் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகன் இன்று நேற்று ஏப்ரல் 16 ஆம் திகதி வேலைக்கு சென்றார். இதன்போது தெல்லிப்பழை பொலிஸார் அவரை மறித்து , கஞ்சா பாவித்துள்ளதாக கூறி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதன்பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் எனது மகன் எந்தவிதமான போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவரை வைத்தியசாலையை விட்டு வெளியே அழைத்துவரும்போது “நீ சாராயம் குடித்திருக்கிறாய்” என மிரட்டினார்களாம். மருத்துவ பரிசோதனையை மீறி மிரட்டுவதற்கு காரணம் என்ன.

நான் கடன்பட்டு வீடு கட்டினேன். அந்த கடனை அடைப்பதற்காக 19 வயதிலேயே எனது மகன் ஒவ்வொரு நாளும் தவறாது வேலைக்கு செல்கின்றார். இவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு இடையூறு விளைவித்துள்ளனர். பொலிஸார் வீதியில் நின்றும் இலஞ்சம் வாங்கி உழைப்பார்கள் அத்துடன் மாத சம்பளமும் வரும். ஆனால் எனது மகன் வேலைக்கு சென்றால் தான் எமக்கு சம்பளம் கிடைக்கும்.

கஞ்சா பாவித்ததாக கூறி அவமானப்படுத்தியுள்ளனர். எனது மகனுக்கு வேலை கொடுப்பவர் உண்மையை அறியாமல், அவர் கஞ்சா பாவித்தவர் தான் என்று நினைத்து அவரை வேலையிலிருந்து நிறுத்தினால் யார் பொறுப்பு? இவ்வாறு செய்தால் எனது மகனுடன் அவரது நண்பர்கள் சேருவார்களா?

எனது மகனை கைது செய்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம் தானே? ஏன் கடைசிவரை ஏன் தெரியப்படுத்லவில்லை? எல்லாம் முடிந்த பின்னர் எனது மகன் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியே எனக்கு விடயம் தெரிந்தது.

உண்மையாக போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்களை பொலிஸாருக்கு தெரியும். அவர்களை கைது செய்யுங்கள். அதைவிடுத்து அப்பாவிகளை கைது செய்யாதீர்கள்.

நான் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பகிரங்க சவால் ஒன்று விடுக்கிறேன். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வைத்தியசாலைக்கு வாருங்கள். நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றீர்களா இல்லையா என முதலில் உங்களை பரிசோதனை செய்வோம். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த சவாலுக்கு வாருங்கள். அதன்பின்னர் எங்களது பிள்ளைகளை பரிசோதனை செய்யுங்கள் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

23 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0