உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் ; நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நிதி முறைக்கேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிராக நீண்டகாலமாகப் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, சபையின் விதிகளைப் புறக்கணித்துத் தன்னிச்சையாகச் செயற்பட்டமை, நிர்வாக ரீதியிலான முறைகேடுகள் மற்றும் ஏனைய சபை உறுப்பினர்களின் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளாது தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் குறித்துக் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நகர சபை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணையம் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் தனது விசாரணைகளை நிறைவு செய்து, இறுதி அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவிசாளருக்கு எதிரான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0