உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு யுவதிகள் சிக்கினார்கள்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் சட்டவிரோத ‘ஐஸ்’ போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இரண்டு யுவதிகளைப் பொலிஸார் இன்று  கைது செய்துள்ளனர்.

மீரிகமை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கணிசமான அளவு ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய யுவதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மற்றும் கந்தானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி யுவதிகள் நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து மீரிகமை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

70 0 0