உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதன்படி எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று அறிக்கையிக் பின்னரே உறுதியாக கூறமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முன்பதாக குறித்த பகுதி ஒன்றின் பற்றைக் காணி ஒன்றில் எலும்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறையினர் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமகன் ஒருவரால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் குறித்த எலும்புக் கூடுகளை அடையாளம் கண்டதாகவும், இதனடிப்படையில் குறித்த எலும்புக்கூட்டை , நீதிபதி, மரணவிசாரணை அதிகாரி மற்றும் கிராமசேவகர் உள்ளிட்ட பலரது முன்னிலையில் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் குறித்த எலும்புக் கூடு எரிந்த நிலையில் தோற்றமளிப்பதாக இருப்பதாகவும் சந்தேகிக்கப்படும் நிலையில் குறித்த விடையம் அப்பகுதிய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

70 0 0