உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று புத்தாண்டு நிகழ்வுகளும், பாரம்பரியக் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் மங்கலகரமான முறையில் நடைபெற்றன.

புத்தாண்டு சுபநேரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றப்பட்டு, புத்தாண்டு வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

புத்தாண்டின் விசேட அம்சமான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இதன்போது வெகு சிறப்பாக இடம்பெற்றது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்களால் அங்கத்தவர்கள் மற்றும் வருகை தந்திருந்த பொதுமக்களுக்குக் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது. இது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், தமிழ் மக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், புத்தாண்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெற்றியடையவும், சமூகத்தில் சுபீட்சம் நிலவவும் தமது விருப்பங்களை வெளியிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

70 0 0