உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்!

Uncategorized 6 மாதங்கள் முன்
63 பார்வைகள்

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு
செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விசா விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைபவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சோதனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.

புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்தத் சான்றிதழ் கட்டாயமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் நடத்தைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கையுடன் பின்வரும் நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எகிப்து – இந்தோனேசியா -நேபாளம் – ஆப்கானிஸ்தான் – ஈராக் – கென்யா – நைஜீரியா – கானா ஆகிய நாடுகளாகும்.

இந்த நாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக முக்கிய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

108 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

197 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0