உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

22 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0