சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில், வாகனத்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவத்தன்று குறித்த வாகனம் அம்பன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, தனக்கு முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்துள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் கடுமையாகச் சேதமடைந்த போதிலும், அதில் பயணித்தவர்கள் எவ்வித பாரிய காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக வாகனங்களை முந்திச் செல்ல முற்படுவதே இவ்வாறான விபத்துகளுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


