மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் எனும் 58 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
தனது விவசாயச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக, மின்சார நீர் இறைக்கும் மோட்டாரை பொருத்த முயன்ற போதே மின்சாரம் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
