உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசறை புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், வெலிசறையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (11) இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களாக வெலே சுதா, தெமட்டகொடை சமிந்த, லொக்கு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத், மன்னா ரமேஷ் ஆகியோர் அடங்குவர்.

பூஸா சிறைச்சாலையிலிருந்தவாறே இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சிறைச்சாலையானது, நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒரு விசேட தடுப்பு மையமாகும். இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் முதலாவது கைதிகள் குழு இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

58 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

91 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

44 0 0