உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ். காரைநகரை அண்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 1856 இலக்கமுடைய இந்திய இழுவைப்படகுடன் 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்படி மீனவர்களின் விவரங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

74 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

41 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

92 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

66 0 0