உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கைக்கு என்றும் துணை நிற்கும் சீனா! – எரிபொருள் விநியோகம் குறித்து தூதுவர் விசேட அறிவிப்பு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எக்காலத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சில நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இலங்கையில் அத்தகைய நிலைமை ஏற்படாது என்பதை நாம் உறுதியாகக் கூறுகின்றோம். ஒருவேளை அவ்வாறானதொரு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானால், இலங்கையில் தற்போது இயங்கி வரும் சீனாவின் ‘சினோபெக்’ நிறுவனம் ஊடாக அந்த நிலைமையை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவின் அடிப்படையில், எந்தவொரு சவாலான சந்தர்ப்பத்திலும் இலங்கைக்குத் துணைநிற்பதில் சீனா உறுதியாக உள்ளது. எனவே, எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டு மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0