உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சபையில் சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியைக் கண்டால் அடங்கிப் போகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர எம்.பி. பகிரங்கத் தாக்கு

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு பகிரங்கமாகக் கிண்டல் தொனியில் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது எதிர்க்கட்சியினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி சபையில் இல்லாத சந்தர்ப்பங்களில் சிங்கங்களைப் போலக் கர்ஜிக்கும் எதிர்க்கட்சியினர், அவர் சபைக்குள் நுழைந்ததும் அப்படியே பூனைக்குட்டிகளாக அடங்கிப் போகின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருவதையே எதிர்க்கட்சியினர் தற்போது எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் உரிமையும் ஜனாதிபதிக்கு உள்ளது. அதனை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0