உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்  ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை(11) மன்னார் மாவட்ட   இளைஞர், யுவதிகளுக்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட  (PSA) வரைவு தொடர்பாகவும் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சட்டங்கள் மற்றும் தற்போது வரை பில் இருக்கின்ற PSA தொடர்பாகவும்  தெளிவூட்டல் செயலமர்வு  மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில்  இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தொழிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு இருந்தனர்.

மிகவும் உன்னிப்பாகவும், தற்போது மிகவும் பேசுபொருளாக இருக்கின்ற இந்த ‘அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம்’ (PSA) தொடர்பான தெளிவுபடுத்தல்  இடம் பெற்றது.சட்டத்தரணி அல்வில் அமல்ராஜ் தெழிவூட்டல்களை வழங்கினார்.

அடுத்த கட்டமாக, நாங்கள் இந்த செயலமர்வை மேலும் மெருகூட்டும் விதமாக  சிவில் சமூகங்கள், சிவில் அமைப்புகள் போன்ற பல்வேறு நபர்களுக்கும்  முன்னெடுக்கவுள்ளனர்.

UNOPS நிறுவனத்தினுடைய விருத்தி திட்டத்தின் கீழ், நிதி அனுசரணையில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0