உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிலக்கரி ஊழலால் 22 பில்லியன் நட்டம்: அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலகியிருக்க வேண்டும்! – முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் தாக்கு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நிலக்கரி கொள்வனவு மோசடி மூலம் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாகப் பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

“புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போதும் பதவிகளைத் துறக்கத் தயாராக இல்லை. முன்னைய அரசாங்க காலங்களில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் திலக் மாரப்பன போன்றோர் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கௌரவமாகப் பதவி விலகினார்கள். ஆனால், இன்றைய அமைச்சர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் முற்படுகின்றனர்.

அமைச்சர் குமார ஜயக்கொடி, உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறைந்தபட்சம் அந்த விசாரணை முடியும் வரையாவது அவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது கவலைக்குரியது.

நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட நட்டத்தைத் திறைசேரி மூலமோ அல்லது மின் கட்டண அதிகரிப்பு மூலமோ ஈடுசெய்யப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார். திறைசேரிப் பணமும் மக்களின் பணமே, மின் கட்டணமும் மக்களின் பணமே. அமைச்சரின் தவறை மறைத்து அந்த நட்டத்தை மக்களின் தலையில் சுமத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வு அறிக்கையைத் தயாரிக்கும்போது, ‘கோப்’ குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுத்துள்ளார். ஒரு சுயாதீன திணைக்களத்துக்குச் சென்று அழுத்தம் கொடுக்க இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீண்டகாலமாக கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் இழுத்தடித்ததன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது. தற்போதைய கணக்காய்வு அறிக்கையை அரசு ஏற்கின்றதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0