உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மாகந்துரே மதுஷ் கொ*லை வழக்கு: ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கருதப்பட்ட மாகந்துரே மதுஷ் கொ*லை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைக் கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளின் போது, தாம் சட்டவிரோதமான முறையில் எந்நேரமும் கைது செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டு, குறித்த பொலிஸ் அதிகாரிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறிப்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதால், தமக்கு அநீதி இழைக்கப்படலாம் என்றும், எனவே இந்த விசாரணையை அவரிடமிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அதிகாரிகளைக் கைது செய்வதற்குத் தடை விதித்ததோடு, இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை மே மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.இதேவேளை, இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

0 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0