உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெடுக்குநாறிமலையால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் ;டக்ளஸ் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரப்பு பௌத்த சமயத்திற்குரியது என்றும், அதனை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி (Gazette) அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் துறைசார் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

“வெடுக்குநாறி மலையில் பௌத்த சான்றுகள் இருப்பதாகக் கூறி நிலங்களை அடையாளப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது வரலாற்றை மறைக்கும் செயல் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கும் ஒரு முயற்சியாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் தாம் ஆட்சியில் இருந்தபோது, இவ்வாறான வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படாமல் தடுத்து, ஒரு சுமுகமான நிலையைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய சூழலில் நிலைமை முற்றிலும் மாற்றமடைந்து வருவது துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை விளக்கி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

0 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0