உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன,

சுற்றுலாத்துறையும் வருமானமும்
இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்த முடியும். இதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டுவதற்குப் பெரும் வாய்ப்புகள் ஏற்படும் என்று ரஜீவன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கான சலுகைகள்
பொதுமக்கள் குறைந்த செலவில் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்யவும், அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளவும் இந்தப் போக்குவரத்து வழிவகை செய்யும். குறிப்பாக, வடக்கு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இது காணப்படுகின்றது.

வாழ்வாதார மேம்பாடு
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் வலுப்படுவதன் மூலம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவே, இப்பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0