உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கை போன்ற நாடுகளுக்குப் புதைபடிவ எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது. எனவே, கிடைக்கக்கூடிய வளங்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்.

இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே, இக்காலப்பகுதியில் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அவசியமாகும். விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், பகல் வேளையில் சூரிய சக்தி அதிகளவு கிடைப்பதாலும், சமையல் மற்றும் துணி துவைத்தல் போன்ற மின்சாரத்தை அதிகம் கோரும் பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறை ஆலோசனைகள்

  • தொலைக்காட்சி, இணைய ரௌட்டர்கள் மற்றும் ரைஸ் குக்கர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாத போது அவற்றின் சுவிட்சுகளை முழுமையாக அணைத்துவிட வேண்டும்.
  • அலுவலகங்களை மூடிச் செல்லும் போது அனைத்து மின் சாதனங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
  • புத்தாண்டுக்காகப் புதிய மின் சாதனங்களை வாங்கும் போது, மின் திறன் மிக்க சாதனங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

மின்சார அதிகார சபையினால் வழங்கப்படும் நான்கு அல்லது ஐந்து நட்சத்திரக் குறியீடு கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தைப் பெருமளவு குறைக்க முடியும். இது தனிநபர்களுக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் பெரும் நன்மையளிக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0