உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை, நேற்று இரவு பொலிசார் முற்றுகையிட்டனர். இந்த நடவடிக்கை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கிணங்க, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு, இரவு சுமார் 10.00 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு, நூலக வீதியில் அமைந்திருந்த குறித்த வீட்டை சோதனையிட்டது.

இதன்போது, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரிடமிருந்து 5840 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மேலதிக சோதனையில், வீட்டிலிருந்து மேலும் 1000 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்த, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரியும் ஒருவரும், குறித்த வியாபாரியும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0