உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்: பீஜிங் கடும் கண்டனம்

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
73 பார்வைகள்

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் செமிகண்டக்டர் (Semiconductor) துறையில் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த டன்ஹாவ் வாங் (Danhao Wang) என்பவர், கடந்த மார்ச் 19 ஆம் திகதி பல்கலைக்கழகக் கட்டடத்திலிருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினர் அவரிடம் “கடுமையான முறையில்” விசாரணை நடத்தியதாகச் சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது ஒரு தற்கொலை முயற்சியாக இருக்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் சந்தேகிக்கும் நிலையில், சீன வெளியுறவு அமைச்சு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் இத்தகைய விசாரணை முறைகள் சீனக் குடிமக்களின் உரிமைகளை மீறுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சீர்குலைப்பதாகச் சீனா சாடியுள்ளது

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மீதான கண்காணிப்பைக் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இராணுவத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆராய்ச்சியாளர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், வாங்-கின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ஜேன் வூ என்ற சீன-அமெரிக்க விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணம் அமெரிக்காவில் உள்ள சீன கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

109 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

198 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0