சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் நெடுங்கேணி பொதுச்சந்தை.!
வவுனியா வடக்கு பிரதேச சபை உட்பட்ட நெடுங்கேணி பொதுச் சந்தையும் அதை சூழ்ந்த பகுதிகளும் பிரதேச சபையினால் மாத காலமாக கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் அங்கு கழிவுகள் கூட காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது. இதனால் மீன் வியாபாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய முடியாமையினால் பொதுச்சந்தை வீதியோரங்களுக்குச் சென்று தங்களுடைய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனார்.
தொலைப்பேசி மூலம் உதவி தவிசாளரிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது உடனடியாக அதனை சீர் செய்வதாக பதில் அளித்துள்ளார்.
பொதுச்சந்தை வியாபாரிகளும் பொதுமக்களும் அங்கு நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பல தடவைகள் பொதுமக்களும், வர்த்தக உரிமையாளர்களும் முறையிட்ட போதும் சபையில் தவிசாளரினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



