உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேனனின் அறிவுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பேருந்துகளில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்த லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே தனியாக பயணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட் வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பேருந்துகளில் பிரயாணிகள் போல பயணம் செய்யும் கொள்ளையர்கள் பேருந்துகளில் தனியாக யார் பயணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தமது பையில் இருந்து கவர் உடையாத மயக்க மருந்து கலந்த லெமன் பப் பிஸ்கட்டை எடுத்து கொடுத்து அதனை உடைத்து அவர்கள் சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விடுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் காப்பு, மோதிரம், சங்கிலி போன்ற தங்க ஆபரணங்கள் மற்றும் அவர்களது கைப்பையில் இருக்கும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுவார்கள்.

மயக்கமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 தினங்களுக்கு பின்னர்தான் சுயநிலைக்கு வருகின்றனர்.

இவ்வாறு அண்மை காலமாக பேருந்துகளில் பயணித்த பலரிடம் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் இருந்து தனியாக பிரயாணம் செய்வர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடகூடாது என்பதுடன் பொதுமக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

16 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

58 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0