உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சித்திரை புத்தாண்டு மற்றும் நுவரெலியா 2026 வசந்த காலத்தையொட்டி இன்று 09 ஆம் திகதி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.


நுவரெலியா நகரில் செயற்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், வீதியோர விற்பனை நிலையங்கள் மற்றும் அவற்றை தயாரிக்கும் உணவின் தரம் தொடர்பான பரிசோதனை இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
குறிப்பாக சமையலறை, உணவு சேமிப்பு பகுதிகள், மற்றும் உணவு கையாளும் ஊழியர்களின் சுகாதாரம், பழமையான உணவுகள், காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்படங்கள் கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டது

இதன்போது மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், அன்று காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படாத உணவகங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து திடீரென சுற்றிவளைக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0